Friday, September 18, 2009

உன்னை போல் ஒருவன் (நிழலானவன்)

உன்னை போல் ஒருவன் (நிழலானவன் )

ஆதியாய் நான்
அந்தமாய் நீ
உலகம் உணர்ந்த உண்மை நான்
வில(ள)க்க முடியா பொய்மை நீ

என் ஜனனம் உன் முகவுரை
என் பெரும் பயணம் உன் முடிவுரை
ஜனனம் நான் ஜடம் நீ
ஜடமானாலும் ஜவ்வாது நீ
ஜனனித்தாலும் ஜடம் நான்
என் மரணத்தினூடே மறைகிறாய்


நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
வருவதும் போவதும் உன் இயல்பு
சில வருகைகளில் என்னை விட பெரியவனாய்
சில வருகைகளில் என்னை விட சிரியவனாய்
பெரியவன் ஆனாலும் மமதை இல்லை உன்னிடம்
சிரியவன் ஆனாலும் சிறுமை இல்லை உன்னிடம்


மலையானாலும் மடுவானாலும்
எளியோனானாலும் வளியோனானாலும்
அறிவாளியானாலும் அறிவிலியானாலும்
கோனானாலும் கோவணாண்டி ஆனாலும்
இரண்டுமே ஒன்றுதான் உனக்கு


தவறுகள் செய்து யாரும் கானவில்லை என
மனம் கலிப்படையும் போது – கலங்குகிறது கர்ப்பம்
கன கச்சிதமாய் நீ தொடர்வது கண்டு
சில கணப்பொழுதில் கலைகிறது அந்த கலக்கம்
உன்னால் என்ன செய்ய முடியும் என நினைக்கும் போது
மறு கணமே மனம் மறுண்டு இருள் கவ்வுகிறது
இருளே வடிவானாலும் – விடிவெள்ளியாய் நீ


உன்னை போல் ஏற்ற தாழ்வற்று
விருப்பு வெருப்பு அற்று
உண்மையாய் இருந்தாலும் பொய்யாய் நான்
பொய்யாய் இருந்தாலும் உண்மையாய் நீ


எவ்வளவு முயற்சி செய்தாலும்
முடியாது என்னால் – உன்னை போல் இருக்க
எவ்வளவு முயற்சி செய்தாலும்
முடியாது உன்னால் – என்னை போல் இருக்க


ஆம்

மனிதன் நான் மரப்பாச்சி நீ
உண்மை நான் பொய்மை நீ
நிஜமாய் நான் நிழலாய் நீ