Friday, September 18, 2009
உன்னை போல் ஒருவன் (நிழலானவன்)
ஆதியாய் நான்
அந்தமாய் நீ
உலகம் உணர்ந்த உண்மை நான்
வில(ள)க்க முடியா பொய்மை நீ
என் ஜனனம் உன் முகவுரை
என் பெரும் பயணம் உன் முடிவுரை
ஜனனம் நான் ஜடம் நீ
ஜடமானாலும் ஜவ்வாது நீ
ஜனனித்தாலும் ஜடம் நான்
என் மரணத்தினூடே மறைகிறாய்
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
வருவதும் போவதும் உன் இயல்பு
சில வருகைகளில் என்னை விட பெரியவனாய்
சில வருகைகளில் என்னை விட சிரியவனாய்
பெரியவன் ஆனாலும் மமதை இல்லை உன்னிடம்
சிரியவன் ஆனாலும் சிறுமை இல்லை உன்னிடம்
மலையானாலும் மடுவானாலும்
எளியோனானாலும் வளியோனானாலும்
அறிவாளியானாலும் அறிவிலியானாலும்
கோனானாலும் கோவணாண்டி ஆனாலும்
இரண்டுமே ஒன்றுதான் உனக்கு
தவறுகள் செய்து யாரும் கானவில்லை என
மனம் கலிப்படையும் போது – கலங்குகிறது கர்ப்பம்
கன கச்சிதமாய் நீ தொடர்வது கண்டு
சில கணப்பொழுதில் கலைகிறது அந்த கலக்கம்
உன்னால் என்ன செய்ய முடியும் என நினைக்கும் போது
மறு கணமே மனம் மறுண்டு இருள் கவ்வுகிறது
இருளே வடிவானாலும் – விடிவெள்ளியாய் நீ
உன்னை போல் ஏற்ற தாழ்வற்று
விருப்பு வெருப்பு அற்று
உண்மையாய் இருந்தாலும் பொய்யாய் நான்
பொய்யாய் இருந்தாலும் உண்மையாய் நீ
எவ்வளவு முயற்சி செய்தாலும்
முடியாது என்னால் – உன்னை போல் இருக்க
எவ்வளவு முயற்சி செய்தாலும்
முடியாது உன்னால் – என்னை போல் இருக்க
ஆம்
மனிதன் நான் மரப்பாச்சி நீ
உண்மை நான் பொய்மை நீ
நிஜமாய் நான் நிழலாய் நீ
Monday, September 14, 2009
ஒரு கவிதை ????? ஹி ஹி ஹி ...................திட்டாதீங்கோ
நட்சத்திரங்களாய் மாறிட நினைக்கிறேன் – நீலவானமாய் நீ
அல்லியாய் மாறிட அவசரப்படுகிறேன் - அம்புலியாய் நீ
சறுகாய் காய்ந்திட கதறுகிறேன் - மிதிப்பது நீ
தாமரை தடாகமாக தகிக்கிறேன் - தாமரையாய் நீ
விட்டில் பூச்சியாக விழுகிறேன் – விளக்காய் நீ
சிற்பமாய் மாறிட சிந்தை கொண்டேன் – சிற்றுளியாய் நீ
கண் இமையாய் மாறிட கனா கண்டேன் – கண்மணியாய் நீ
மழை துளியாய் மாறிட முனைந்திட்டேன் – நனைவது நீ
முகதிலறையும் காற்றாய் கலந்திடுவேன் – ஜன்னலோரத்தில் நீ
வானவில்லாய் வளைந்திட விழைகிறேன் – வர்ணங்களாய் நீ
மரணத்தை முத்தமிட முந்துகிறேன் – கடவுளாய் நீ
நானாக நானிருக்க நன்றி சொல்வேன் – நீயாக நீ
பயம் , கவலை
எனது முதல் தமிழ் பதிவு
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்.........
மனிதனின் எதிரிகள் இரண்டு
1. பயம் 2. கவலை
பயம் வலுபடைந்த வியாதி. கவலை மெல்ல அரிகும் நோய்.
பயதாலும் கவலையாலும் மனிதன் தன் வாழ்க்கையை நரகமாக்கி கொள்கிறான். சூழ்திருப்போரின் வாழ்வையும் கெடுக்கிறான் .
”அன்சுவதன்சாமை பேதமை” என்றார் திருவள்ளுவர்
பயபடக்கூடிய விஷயங்கலுக்கு நாம் பயபட வேண்டும்.
அதை விட்டு விட்டு எதற்கு எடுதாலும் பயபடுதல் பேதயின் செயலாகும்.
“ பயம் பெரும்பாலும் நம் கற்பனையில் விளைவது “.
எதிர் காலதில் நிகழ போகிற ஒன்றை “இப்படி போகுமோ ??
அப்படி நடக்குமோ “ என்று பற்பல கற்பனையில் அவதி படுவதே பயம். நான்கு முறை இதே பாதையில் சிந்திக்க
துவங்கியதும் பயம் நமது இயல்பாக , பழக்கமாக மாறிவிடுகிறது.
பெரும்பாலான பயம் அனைத்தும் நமது அசாதாரண கற்பனையில் விளைவது
ஒரு சம்பவம் நிகழும் முன் நமது பயங்களை எழுதி வைத்து பின்னர் அவற்றை படித்து பார்த்தால் எப்படி உப்பு பெறாத விஷயங்களுக்கெல்லாம் நாம் பயந்து இருக்கிறோம் என்று தெரியவரும். பயம் மனித இலட்சியத்தை அடியில் லேசாக குழி பறிக்கும் இயல்புடையது. மனித நம்பிக்கையை அசைக்க முடியாத தைரியத்தை ஆட்டங்கான வைக்கும் இயபுடையது.
நோயினால் சாகும் முன் சாவின் பயத்தினால் மனிதர்கள் மாண்டிருக்கிறார்கள். எதிரியால் தோற்கடிக்கப்படும் முன்
வெறும் பயத்தால் தோற்றிருக்கிறார்கள்.
பயம் – ஒரு நஞ்சு , விஷம் . நமது உடலில் பலத்த மாறுபாட்டை அது உண்டு பன்னுகிறது ,
உடலில் சக்கரையின் அளவை அதிக படுத்தி இதய துடிப்பயும் மிகை படுத்துகிறது . சீரான உடலியக்கத்தை கெடுக்கிறது
பயம் உண்மையாக இருக்கலாம்
அல்லது கற்பனையில் இருக்கலாம்
நாம் நம்புவதற்கேற்ப நம் உடல் மாறுபடுகிறது.
“ எதை கண்டு பயபடுகிறோமோ அதை முதலில் செய்ய
துவங்குங்கள் , பயம் செத்து போவதை காண்பீர்கள் “
என்று எமர்சன் கூறுகிறார்
இரு வகைகளில் பயத்தை போக்கலாம்.
முதலாவதாக
ஏன் பயபடுகிறோம் ?? ஏன் பயபட வேண்டும் ??
தலயா போய்விடும் ?? என்று தீவிரமாக பயத்தை அஃகு வேராக ஆணி வேராக அலசுவது முதல் வழி . அலசினால் காரணமில்லாததிற்கு நாம் பயபடுவது தெரியும்.
இரண்டாவதாக ,
எதை கண்டு பயபடுகிறோமோ
அதில் சிறிது சிறிதாக நுழைந்து
காரியங்களை செய்ய துவங்குவது
“ செயலே பயத்தை போக்கும் அரு மருந்து “
பயம் நெஞ்சை கவ்விக்கொண்டு இருக்கும் போது
அதை அப்புறபடுத்துவது எளிதல்ல
“ நம்பிக்கையே பயத்தின் மாற்று “
பயத்திற்கு நேர் மாறான , தைரியமான எண்ணங்களை
மனதிற்குள் விடுவது , அதை பற்றி சிந்திப்பது நல்ல பயனை தரும். பயம் ஒரு எண்ணம். அதை அகற்றி நம்பிக்கை, துணிவு
என்ற மாற்று எண்ணங்களை வைக்காதவரை பயமே நம்மை விரட்டி அடித்துக்கொண்டிருக்கும்.
“ எந்த நேரமும், எந்த நிமிடமும் எதற்கும் தயார் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். எதை நினைத்தும்
எப்போதும் அச்சப்படாட்தீர்கள். இந்த நிலையை எட்டி விட்டால்
மன சஞ்சலம் ஓடிப்போய் விடும்.
அடுத்து கவலையை பற்றி மற்றுமோர் பதிவில் பார்போம்.