ஜப்பான் டோகைமுரா யுரேனிய செரிவு அணு உலை விபத்து.
செப்டம்பர் 30, 1999 , திறமையற்ற பணியாளர்களாலும் (un-skilled labour) ஆட்சி அறை இயக்குனரின் (control room director) அல்லது மேற்பார்வையாளரின் அலட்சியத்தாலும் , பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதலாலும் , பாதுகாப்பு எச்சரிக்கைமானிகளை நிறுவாததாலும் ஜப்பானின் தோகைமுரா
யுரேனிய செரிவு தொழிற்கூடத்தில் அணு உலை விபத்து ஏற்பட்ட தினம்.
20% செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை மின்சிய அளவில் அணு உலை கொப்பறையில் ஊற்றிவிட்டதால், பூரண தொடரியக்க விபத்து (criticality accident) ஏற்பட்டு, 20 மணி நேரம் விட்டு விட்டு அணு உலை பூரண தொடரியக்க்கம் இயங்கி அபாயநிலையில் சுற்றுப்புறத்தில் கதிரடி தெளிக்கப்பட்டது.
உலக அணுவியல் பேரவை இவ் விபத்தை தகுதி நிலை 4
(level 4: accident category) அறிவித்தது.
நடந்தது என்ன (sequence of events ) என்பதற்கு முன்னால்
அணு உலை பற்றி சில வரிகள்
அணுமின் சக்தி
அணு மின் சக்தி என்பதும் ஒரு வகையில் அனல் மின்சாரம் போன்றதே. அணு உலைகளில் (Reactor)அணு சக்தியின் மூலம் ஏற்படும் வெப்பசக்தியினால் கண நீர் அல்லது நீரை ஆவியாக்கி டர்பனை சுழல வைபதின் மூலம் ஜெனரேட்டரை(Generator) இயக்கி மின்சாரம் உற்பதியாகிறது.
அணு உலை இயக்க்கம்:
பொதுவாக அணு உலையில் யுரேனியம் 235 (U235) மீது
நியூட்ரான் கனையை ஏவி விடும்போது அணு கருவில் நியூட்ரான் எண்ணிக்கை அதிகமாகி இரு துண்டங்களாகி இனைவு சக்தி (Binding energy வெப்பசக்தி ) வெளிப்பட்டு இரு நியூட்ரான்கள் வெளிப்படும் , இவ்வாறு இரு நியூட்ட்ரான்கள் அடுத்து இரு யுரேனியம் அணுவை தாக்கி பிளந்து 4 நியூட்ரான்கள் வெளியேறும். இவ்வாறாக நியூட்ரான் எண்ணிக்கை 2,4,8,16,32,64,128...என்ற அளவில் பெருகும்.
இது ஒரு ஜியாமண்ட்ரிக் தொடர் பெருக்கம்.(Geometric progression)
இந்த அளவு கட்டுக்கடங்காமல் நியூட்ட்ரான் பெருக்கமே அணுகுண்டாக வெடிக்கிறது.
மீறும் தொடரியக்கம்/ஆறும் தொடரியக்க்கம்:
(Super critical reaction and Sub critical reaction )
அளவு கடந்த நியூட்ட்ரான் பெறுக்கம் அணு உலை மொழியில் மீறும் தொடரியக்கம்(Super critical reaction)எனப்படுகிறது. இவ்வாறான சமயங்களில் நியூட்ட்ரான் விழுங்கிகளை (Neutron absorbers) அணு உலையில் நுழைத்து நியூட்ட்ரான் பெறுக்கத்தை குறைப்பதால் அணு உலை இயக்க்கம் நின்று விடும். இது ஆறும் தொடரியக்கம் (Sub critical reaction)
பூரண தொடரியக்கம் (Critical reaction)
இந்த இயக்கத்தில் நியூட்ரான் பெறுக்கத்தை கூட்டியும் , குறைத்தும் நடு நிலையில் நியூட்ட்ரான்களை வைப்பதை பூரண தொடரியக்கம் (Critical reaction) எனப்படும். இது அணு உலையில்
நடைபெறும் இயக்க்கம். இன்நிலையில் வெப்பசக்தி ஒரே சீராக வைக்கப்படும்.தடுப்பு மற்றும் ஆறும் இயக்கங்களில் வெப்ப்பம் உடனே அல்லது படிபடியாக குறைக்கப்படுகிறது.
மீறும் தொடரியக்க்கம் பொதுவாக அணு குண்டு வெடிப்பிலும் , அணு உலை ஆட்சியில் (Reactor control)பூரண தொடரியக்க்கமும், ஆறும் தொடரியக்கமும் செயல் படுத்தப்படுகிறது.
அணு உலை ஆட்சி கோல்கள் (Reactor control rods)
அணு உலைகளில் நியூட்ரான் பெறுக்கத்தை கூட்டவும் குறைக்கவும் ஆட்சி கோல்கலும் (Control rods) எதிர்பாராமல் ஏற்படும் அபாய நிலை (Prompt critical) விபத்தை தவிர்க்க அணு உலையை நிறுத்த, நிறுத்தக்கோல்களும் (shutdown rods) ,
அணு உலை எரிபொருளாக எரிக்கோல்களும் (Fuel rods)
நியூட்ட்ரான் விழுங்கிகளாக் (Neutron absorbers) Boron carbide
போரான் கார்பைட் இவ்வாராக பலவிதமான ஆட்சி கோல்கள் பயன்படுத்தப் படுகிறது.
அணு உலை நியூட்ரான் பெறுக்க காரணி:
(Neutron multiplication factor)
அணு உலையில் கணப்பொழுதில் கணக்கிலடங்கா இயக்கக்கள் நடைபெறுகிறது. ஓர் அணு பிளவில் 200 Me v சக்தி வெளிப்படிகிறது. நியூட்ட்ரான் பெறுக்க காரணி “ K”(Multiplication factor) K=1 என்றால் உலை இயக்கத்தில் பிறக்கும் எல்லா நியூட்ட்ரான்களும் பயன்படுத்தப்படுகிறது என்றும், K=0.5 என்ர்றால் நியூட்ட்ரான் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அணு உலை நிறுத்தப்படுடிகிறது எனவும் K=1.006 என்றால் அணு உலை சக்தி அதிகமாகிறது என்றும் K=1.5 அபாய நிலையை எட்டிவிட்டது உடனே தடை ஏற்பாடுகள் இயங்கி அணு உலை நிறுத்தப்படவேண்டும் என்றும் K>3 என்றால் அங்கு அணு குண்டு வெடிக்கப்போகிறது எனவும் நியூட்ட்ரான் பெருக்க காரணி விவரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் டோகைமுரா அணு உலை விபத்தை பற்றி அடுத்த பதிவில் தொடருவோம்.................