பயணம்
மனிதனின் வாழ்க்கைப் பயணம்
தொடங்குகிறது பிறந்தது முதல்
முடிவான பயணம் என்றாலும்
எல்லை தெரிவதில்லை ஆரம்பத்தில்
திட்டமிட்டாலும் , திட்டமிடாவிட்டாலும்
தொடர்கிறது பயணம்
பயண வழியில் பலதரப்பட்ட தருணங்கள்
மகிழ்ச்சியும் சோர்வையும் அளிக்கின்றன
ஆனால்.........
சில நிகழ்வுகள்
மனிதனை புரட்டிப்போடுகிறது
மீளமுடியா மனிதனை
மீளாதுயில் தொடற்கிறது
யாருமே எண்னிப்பாற்காத
கடைசிப் பயணத்தை
மனம் கற்பனை குதிரையில்
ஓட விட்டு கலங்குகிறது
மிக சில நேரங்களில்
மருத்துவம் மரணத்தை மிஞ்சுகிறது
மிகப் பல நேரங்களில்
மரணம் மருத்துவத்தை மிஞ்சுகிறது
மரணமும், மருத்துவமும்
நடத்தும் மாரத்தானில்
வாழ்நாள் நீள்கிறது...........
நீள்கின்ற ஒவ்வொரு கணமும்
பெரும் சுமையாய் கசக்கிறது
ஒவ்வொரு மணித்துளியின்
முக்கியத்துவம் தெரிகிறது
முடிக்கவேண்டிய காரியங்கள்
மனதில் பட்டியலிடப்படுகிறது
மாரத்தானில் மருத்துவம் மிஞ்சும்போது............
பட்டியல் நீள்கிறது பேராசையினால்
முடிந்த காரியங்களினால் மனம் மகிழ்கிறது
முடியாத காரியங்களால் மனம் மருள்கிறது
மாரத்தானில் மரணம் மிஞ்சும் போது...........
ஆர்ப்பரிக்கும் ஆழிப்பேரலையில்
அல்லல் படும் கப்பலை போல்
மனம் அல்லல் படுகிறது
பணத்தின் எல்லை தெரிகிறது..
பயணதின் எல்லையும் தெரிகிறது
பயத்தின் எல்லையும் தெரிகிறது
முடிவில் கடவுளை வேண்டுகிறது
முடியாது என தெரிந்தும் ,
கடைசி கட்ட முயற்சி ?????
பணத்தின் பலத்தாலும்
உற்றாரின் அரவனைப்பாலும்
நண்பர்களாலும்
எதையும் தாங்கும் மனத்தாலும்
கடவுள் நம்பிக்கையாளும்
மருத்துவ பலத்தாலும்
மீண்டும் மரணத்தை மிஞ்சும் முயற்சி தொடற்கிறது...
பயண எல்லை நெருங்குகிறது...
கெடு தேதி தொலைவில் இல்லை
பயண கெடு தேதியான
கோடிட்ட இடம் _____________
நிரப்பப்படாமலேயே இருக்கிறது
மனம் கடவுளை வேண்டுகிறது
கோடிட்ட இடத்தை
நாளை என்றே
நிரப்பவேண்டும் என்று
மரணமும், மருத்துவமும்
நடத்தும் மாரத்தான்
கண்ணாமூச்சி தொடற்கிறது..
அதிர்ச்சியுற்று
ஆர்பரித்து
ஆயாசப்பட்டு
ஏமாற்றமடைந்து
கடைசியில்
மனம் அமைதி கொள்கிறது
இன்றைய பொழுது இனிதே நிறைவடைந்தது..
கோடிட்ட இடம் நாளை என்பதாலோ ????
உற்சாகத்துடன் நாளைய பொழுதை எதிர்நோக்கி!!!!!!!!!