Monday, September 14, 2009

ஒரு கவிதை ????? ஹி ஹி ஹி ...................திட்டாதீங்கோ

நட்சத்திரங்களாய் மாறிட நினைக்கிறேன் நீலவானமாய் நீ

அல்லியாய் மாறிட அவசரப்படுகிறேன் - அம்புலியாய் நீ

சறுகாய் காய்ந்திட கதறுகிறேன் - மிதிப்பது நீ

தாமரை தடாகமாக தகிக்கிறேன் - தாமரையாய் நீ

விட்டில் பூச்சியாக விழுகிறேன் விளக்காய் நீ

சிற்பமாய் மாறிட சிந்தை கொண்டேன் சிற்றுளியாய் நீ

கண் இமையாய் மாறிட கனா கண்டேன் கண்மணியாய் நீ

மழை துளியாய் மாறிட முனைந்திட்டேன் நனைவது நீ

முகதிலறையும் காற்றாய் கலந்திடுவேன் ஜன்னலோரத்தில் நீ

வானவில்லாய் வளைந்திட விழைகிறேன் வர்ணங்களாய் நீ

மரணத்தை முத்தமிட முந்துகிறேன் கடவுளாய் நீ

நானாக நானிருக்க நன்றி சொல்வேன் நீயாக நீ

1 comment:

  1. Anonymous12:05 PM

    Kandeepa makku neenga oru kavithai puli...
    Yenga veetu alli kaalaiilum malargiradhe!!! adadae achiriya kuri!!!

    ReplyDelete