நட்சத்திரங்களாய் மாறிட நினைக்கிறேன் – நீலவானமாய் நீ
அல்லியாய் மாறிட அவசரப்படுகிறேன் - அம்புலியாய் நீ
சறுகாய் காய்ந்திட கதறுகிறேன் - மிதிப்பது நீ
தாமரை தடாகமாக தகிக்கிறேன் - தாமரையாய் நீ
விட்டில் பூச்சியாக விழுகிறேன் – விளக்காய் நீ
சிற்பமாய் மாறிட சிந்தை கொண்டேன் – சிற்றுளியாய் நீ
கண் இமையாய் மாறிட கனா கண்டேன் – கண்மணியாய் நீ
மழை துளியாய் மாறிட முனைந்திட்டேன் – நனைவது நீ
முகதிலறையும் காற்றாய் கலந்திடுவேன் – ஜன்னலோரத்தில் நீ
வானவில்லாய் வளைந்திட விழைகிறேன் – வர்ணங்களாய் நீ
மரணத்தை முத்தமிட முந்துகிறேன் – கடவுளாய் நீ
நானாக நானிருக்க நன்றி சொல்வேன் – நீயாக நீ
Kandeepa makku neenga oru kavithai puli...
ReplyDeleteYenga veetu alli kaalaiilum malargiradhe!!! adadae achiriya kuri!!!