Thursday, October 15, 2009

போட்டி தேர்வும் எனது அனுபவமும் பாகம் – 1

போட்டி தேர்வும் எனது அனுபவமும் பாகம் – 1

இப்பொழுதெல்லம் அதிக அளவில் அரசாங்க வேலைக்காக
போட்டித்தேர்வுகள் நடத்தபடுகின்றது. நானும் இதெலாம் சும்மா ஒரு கண் துடைப்பு என்றே நினைத்து விட்டுவிடுவேன்.
ஆனால் என் அக்கா விடாமல் இதை போன்ற தேர்வுகளுக்கு apply செய்து மெனக்கட்டு தயார் செய்து கொண்டிருப்பார் .
கடின முயற்சியின் பலனாக மத்திய அரசாங்க வேலைக்கு தேர்வாகி வேலை செய்துக்கொண்டிருகிறார். மேலும் அவருடய
நட்பு வட்டாரதிலும் நிறைய பேர் அரசாங்க பணிகளுக்கு தேர்வாகினர்.


இதன் பிறகு எனக்கும் ஒரு நம்பிக்கை பிறந்து நானும் இதை போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்யத்தொடங்கினேன். மேலும் நான் பட்டய (electronics) படிப்பு முடித்ததால் அதிக பட்சமாக ரயில்வே தொழில் நுட்ப பணிகளான ரயில் ஓட்டுனர் மற்றும் ஜுனியர் இன்ஜினியர் பதவிகளுக்கே தயார் செய்து எழுத தொடங்கினேன். நான்கு வருடங்களில் 20 – க்கும் மேற்பட்ட
தேர்வுகள் எழுதினேன்


எனது நெருங்கிய நண்பன் ராஜசேகரும் என் கூடவே தேர்வுகளுக்கு தயாரானான். காலேஜ்ஜில் என் கூட படித்த நண்பன். அவன் வீடு திருவள்ளூர் என் வீடு சென்னை
என்பதால் , தேர்வுக்காக அப்ளிகேஷன் ஃபில் அப் பண்னுவது , DD ,postal order Etc.., போன்ற வேலைகள் எல்லாம் என் வீட்டில் தான் நடக்கும்.

கடின முயற்சியின் பலனாக ரயில் ஓட்டுனர் பதவிக்காக ஒருமுறை செகந்திராபாத் (SCR) ரயில்வே டிவிஷனிலும் சென்னை (SR) ரயில்வே டிவிஷனிலும் எழுத்துத் தேர்வில் தேர்வானேன் . செகந்திராபாத்தில் சைகோமெட்ரி தேர்வு எழுதி தேரவில்லை என நினைக்கிறேன் ரிசல்டில் என் நம்பர் இல்லை . த்ற்போது செய்யும் வேலையின் காரணமாக சென்னை ரயில்வேக்கு நான் செல்லவில்லை . இப்பொழுது நினைத்தாலும்
நான் எடுத்த முடிவு தவறா என்ற நினைப்பு மனதில் ஓடும்.
(கால் காசுன்னாலும் கவர்மெண்ட் காசாச்சுங்கல்ளே.......)

த்ற்போது என்னுடைய இன்னுமோர் காலேஜ் நண்பர் தமிழக அரசின் காவல் துறையில் உதவி ஆய்வாளராக
டெக்னிகல் பிரிவில் தேர்வாகி உள்ளார். இன்னுமொறுவர் சென்னை பெட்ரோலியம் நிறுவனதின் கடலூர் பிரிவில் வேலை செய்கிறார்.


இவ்வாறாக தேர்வின் காரணமாக மூன்று முறை ஐதராபத் இரண்டு முறை பங்களூரு மற்றும் தலை நகர் டில்லிக்கு ஒரு முறை நானும் ராஜசேகரும் சென்று வந்தோம்.


பயணங்களின் போது நடந்த கூத்துக்களை தனி பதிவாகவே போடலம். உதாரணத்திற்கு, டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் திரும்பும் போது விஜயவாட ஸ்டேஷனில் ரயில் நின்று கிளம்பும் போது என் நண்பன் முன்பே ஏறிவிட ரயில் நகர தொடங்க என்னயும் ஏறவிடாமல் தானும் ஏறமுடியமல் கையில் வாழை பழத்துடன் ஒரு பெரியவர் தள்ளாட, ரயில் வேகமெடுக்க ரயில் கூடவே ஓடி நான் அந்த பெரியவரை ஒரு வழியாக உள்ளே பிடித்து தள்ள வாழை பழம் கீழெ விழ பெரியவர் உள்ளே விழ நான் பிளாட்பாரத்லேயே ஓட 3 , 4 பெட்டிகள் என்னை கடந்து செல்ல நான் பயத்திலும் அதிர்சியிலும் கை கால் வெடவெடுக்க முகம் வெளுக்க ஒரு வழியாக முழு சக்தியையும் பிரயோகித்து ஏதோ வந்த ஒரு பெட்டியின் கைபிடியை உத்தேசமாக பிடிதுவிட என் கால்கள் பிளாட்பாரத்தில் தேய
பெட்டி என்னை இழுக்க பெட்டியின் இரண்டு கை பிடியையும் கெட்டிமாக பிடித்துக்கொண்டு ஜம்ப் செய்வது போல் நான் குதிக்க


ஒரு வழியாக அந்த பெட்டியின் மூடிய கதவில் டமார் என்று இடித்து தலை கால் முட்டி எல்லாம் வலிக்க பல்லி போல் அந்த கதவோடு கதவாக ஒட்டிக்கொண்டு மெதுவாக சுய நினைவு வந்தவனாய் சுட்றுபுறத்தை உற்று நோக்க ரயில் மிக வேகமாய் குளிர் காற்று முகதிலறைய கும்மிருட்டில் போய்கொண்ட்ருக்கிறது.

இதெலாம் ஒரு சில கணபொழுதில் நடந்துவிட பதட்டத்துடன் கதவை திறக்க முயற்சி செய்து அது திறக்காமல் என்னை கலாய்க்க கதவின் பக்கத்தில் உள்ள ஜன்னலை பார்க்க அப்பொழுதுதான் கவனித்தேன் நான் ஏறிய பெட்டி மற்றும் அதன் பின்னால் உள்ள பெட்டியின் அனைத்து ஜன்னல் , கதவுகளும் மூடப்பட்டிருகிறது.


ரயில் மிக அதிக வேகத்துடன் செல்ல என் நண்பன் முன் பெட்டியில் நின்று என்னை பார்த்து ஏதோ சொல்கிறான். என் காதில் எதுவுமே விழவில்லை. சீக்கிரம் கதவை திறண்டா நாயே
என அவனை பார்த்து கத்தினேன் . அவனும் உள்ளே சென்று விட்டான் . கதவு திறக்கப்படவே இல்லை . நான் திட்டியதால் சென்று விட்டானோ என்று நினைத்தேன் .

ரயிலுக்கு உள்ளே இன்னும் ஓர் கூத்து நடந்து கொண்டிருப்பது தெரியாமல் நான் ரயிலுக்கு வெளியே அந்த வாழைப்பழ பெரியவரையும் என் நண்பனையும் திட்டிக்கொண்டே நடு நடுவில் கடவுளை வேண்டிக்கொண்டே புலம்பிக்கொண்டிருக்கிறேன்.


இதை இத்துடன் முடித்து மீதியை வேரொரு பதிவில் எழுதுகிறேன். என்னுடைய இப்பதிவின் நோக்கமே போட்டித்தேர்வுக்கு எப்படி தயார் செய்வது எதை தயார் செய்வது என்பதை பட்றித்தான். குறிப்பாக RRB தேர்வுகள்



பொதுவாக வினாக்கள் 100 (அ) 120 இருக்கும்
90 நிமிடங்கள் தேர்வு நேரம் . objective type .
இப்பொழுதெல்லாம் சில பதவிகலுக்கான தேர்வுகள் on-line ல் இணையம் மூலமாக நடத்தப் படுகிறது. RRB இனையத்திலேயே இதற்காண செயல்முறை விளக்கம் உள்ளது.



objective type கேள்விகள், ஒரு வினா 4 விடைகள் என்று இருக்கும் பொதுவாக choose the best answer போல இருக்கும் . choose the best answer கும் choose the correct answer – கும் வித்தியாசங்கள் உள்ளது.

choose the best answer – ல் நான்கு விடைகளுமே சரியாக இருந்தாலும் , இருப்பதில் மிக சரியானதை தேர்வு செய்ய வேண்டும். உதாரனத்திற்கு pi value விடை 22/7 , 3.14 , .. …
மேற் கூரிய இரண்டுமே சரியாக இருந்தாலும் 3.14 – யே தேர்வு செய்ய வேண்டும் .
choose the correct answer – ல் ஒரு விடை மட்டுமே சரியானதாக இருக்கும் ,



பொதுவாக கீழ் உள்ளவட்றில் இருந்து வினாகள் வரலாம்

1 Mathematical ability (quanitative aptitude)
2 Reasoning ability
3 General knowledge
4 Generak awareness
5 History
6 Geography
7 Every day science
8 Sports
9 Political science
10 Day to day events , incidents , news




இப்பொழுது Mathematical ability (quanitative aptitude) – ல்
என்னென்ன வரும் என்று பார்க்கல்ளாம்

• Basic maths
o Addition
o Subtraction
o Division
o Multiplication
o Fraction
o Square and square root
• Ratio and proportion
• Average
• Percentage
• Partnership
• Profit and loss
• Time and work
• Time and distance
• Boats and stream
• Pipes and cisterns
• Simple interest and compound interest

மேலே உள்ளவட்றை பற்றி ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் பார்ப்போம்

4 comments:

  1. //பால்ய வயதில் கிடைத்த அதே மகிழ்ச்சி இப்போதும் கிடைக்கிறதா என சிந்தித்துப் பார்த்தால் இல்லை என்றே சொல்வேன்.//

    அந்த காலத்தில் வேண்டுமானால் இது நன்றாக இருந்திருக்கும். இப்பொழுது இது காலாவதியாகிவிட்டது. ஏண்டா அரசாங்க உத்தியோகத்திற்கு வந்தோம் என்று இருக்கிறது எனக்கு

    ReplyDelete
  2. சிறந்த முயற்சி இளம் தலைமுறையினற்க்கு நல்ல வழி காட்டி தொடராக அமைய என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Anonymous12:40 PM

    Super topic sir ... thanks for ur effort sir ..

    ReplyDelete
  4. Hi Mahesh,

    ---------------------------------------
    * எழுத்துப் பிழைகளை மன்னிக்கிறேன்...
    * புதிய முயற்சியை மதிக்கிறேன்...
    * உதவும் உள்ளத்தை கண்டு வியக்கிறேன்...
    * இறுதியாக, "பல்லியின் சத்தம் நன்மையாம்"... "பல்லி போல் அந்த கதவோடு கதவாக ஒட்டிக்கொண்ட...", உங்கள் எழுத்துச் சத்தம்... உதவி வேண்டுபவர்களுக்கு உறுதுணையாக இருக்க என் மனமார்ந்தப் பாராட்டுக்கள்...
    இன்னும் எதிர்பார்ப்புகளோடு உன் நண்பன்
    --- Syedsha

    ReplyDelete