என் கண்ணே என் மணியே
என் உயிரே என் சொக்க தங்கமே
கருத்தறிந்த காலத்திலே காதலுற்றேன் உன்பால்
களத்தினிலே காத்திருப்போர் கணக்கில்லை என்றாய்
பேராசை பேரிழப்பு என்றாலும்
பெருகுகிறது பெருங்காதல் உன்மேல்
அரசனும் அலைகிறான் ஆண்டியும் அலைகிறான் என்றாய்
கலங்கவில்லை நான் காத்திருக்கிறேன் காமுற்று
கிடைக்காதலால் கருவுகிறேன் உனை கவர்வதற்கு
நேர் வழியில் உனை அடைவது பெரும்பேறு
புற வழியில் உனை அடைவது பெரும்பாடு
புகழழிந்தாலும் புறவழி முயற்சி முந்துகிறது
உன்னை அடைந்தாலும் அடங்கவில்லை ஆசை
நீ இருப்பதால் கெடுகிறான் கிழவனும்
நீ இல்லாதலால் தேடி கெடுகிறான் குமரனும்
மறை பொருளாய் இருக்கிறாய் நீ மானிடர்க்கு
மறை பொருளான உன்னை அடைந்தவர்கள் மறைந்தார்கள்
உண்மை மறை பொருளை கண்டவர்கள் வாழ்ந்தார்கள்
தொண்டு கிழமாகி இந்த உண்மை தெரிந்தாலும்
உன் மேல் கொண்ட காதல் குறையவில்லை
உன்னை அடையவே மனம் ஏங்குகிறது
மறைபொருளான உன் பேர் பணம், பொருள்
பழகு தமிழில் துட்டு அல்லது காசு
என் கண்ணே என் மணியே
என் உயிரே என் சொக்க தங்கமே
Super boss... valthukkal ...
ReplyDeleteஉன்னுடைய கவிதை நடை முன்பை விட சிறப்பாக உள்ளது.
ReplyDeleteமேலும் உன்னுடைய திறமையை எதிர் பார்கிறேன்